விஜய் சேதுபதியுடன் மாஸ் காட்டும் புகழ்...

டாக்டர் திரைப்பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தளபதி விஜய் நடிக்கும் 65வது திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

 
விஜய் சேதுபதியுடன் மாஸ் காட்டும் புகழ்...

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமது அடுத்த திரைப்படமாக விஜய் சேதுபதி நடிக்கும் 46வது திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பொன் ராம் இயக்குவார் என்றும், டி.இமான் இந்த படத்துக்கு இசையமைப்பார் என்றும் அண்மையில் அறிவித்தது.

அதன்படி போலீஸாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது திண்டுக்கல்லில் நடந்துவருகிறது. இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ள விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் பைக்கில் செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதியின் பைக்கின் முன்பக்கவாட்டில் கிரிக்கெட் பேட் மற்றும் பொருட்கள் உள்ளன. இந்த புகைப்படத்தில் இருந்து, இருவரும் படப்பிடிப்பின் இடைவெளியில் கிரிக்கெட் ஆடிவிட்டு வருவதாக தெரிகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது தேசிய விருதுகள் பட்டியலில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web