சொத்து வரி ரூ.6.50 லட்சம்: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

 

நடிகர் ரஜினிகாந்த் சொத்துவரி பிரச்சனை நேற்று முதல் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும், இதனை வைத்து ரஜினியை பிடிக்காதவர்கள் இதுகுறித்து மீம்ஸ்களை போட்டு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு முடிவு காண இன்று காலை தனது டுவிட்டரில் டுவிட் செய்த ரஜினிகாந்த் அந்த ட்வீட்டில் ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்’ என்று கூறியிருந்தார் 

இந்த நிலையில் இன்று சொத்துவரி கட்டுவதற்கு கடைசி நாள் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சென்னை மாநகராட்சி தனது மண்டபத்திற்கு விதித்திருந்த ரூபாய் 6.50 லட்சம் பணத்தை அவர் கட்டி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா அல்லது இதை வைத்து இன்னும் ஒரு வாரம் ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web