விஷாலை வைத்து படம் எடுக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் திடீர் மரணம்!

 

நடிகர் விஷாலின் அடுத்த படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் திடீரென உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபு குஷ்பு நடித்த சின்னத்தம்பி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தவர் கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

balu

இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்கள் விஷாலை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க முடிவு செய்திருந்தார் என்பதும் அதற்காக ஒரு பெரிய தொகையை விஷாலுக்கு அட்வான்ஸ் தொகையாக கொடுத்து இருந்தார் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் விநியோகஸ்தர் சங்க தலைவரும் நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் தயாரிப்பாளர் பாலுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சின்ன தம்பி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த KB பிலிம்ஸ் K.பாலு இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

From around the web