புரமோஷனுக்கு வரமுடியவில்லை என்றால் சம்பளத்தை திரும்ப வாங்குவோம்: த்ரிஷாவுக்கு எச்சரிக்கை

நடிகை த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாத த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா எச்சரிக்கை விடுத்ததுடன் இனி அடுத்த புரமோஷனுக்கும் த்ரிஷா வரவில்லை என்றால் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதி திரும்ப பெறப்படும் என்றும் இதை அப்படியே
 
புரமோஷனுக்கு வரமுடியவில்லை என்றால் சம்பளத்தை திரும்ப வாங்குவோம்: த்ரிஷாவுக்கு எச்சரிக்கை

நடிகை த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாத த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா எச்சரிக்கை விடுத்ததுடன் இனி அடுத்த புரமோஷனுக்கும் த்ரிஷா வரவில்லை என்றால் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதி திரும்ப பெறப்படும் என்றும் இதை அப்படியே விட்டுக்கொண்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் த்ரிஷாவை தவிர மற்றவர்கள் எல்லாம் அறிமுக நட்சத்திரங்கள் என்பதால் த்ரிஷா தவிர யாரும் புரொமோஷன் செய்ய முடியாது என்றும், இன்றைய விழாவில் வரமுடியாதற்கு அவருடைய சூழ்நிலை கூட காரணமாக இருந்தாலும் அடுத்த வாரம் ரிலீஸாகும் படத்திற்கு முன்பு நடைபெறும் புரொமோஷனில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை திருப்பி தர வேண்டி வரும். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்’ என்றும் சிவா தெரிவித்தார்.

நயன்தாரா போன்ற நடிகைகள் எந்த படத்தின் புரமோஷன்களுக்கும் வருவதில்லை என்றும், டி.சிவா மறைமுகமாக நயன்தாராவுக்கு சேர்த்தே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது

From around the web