’மாஸ்டர்’ படத்திற்கு சிக்கல்: விஜய்சேதுபதியுடன் விஜய் அவசர ஆலோசனை!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள 800 என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவாரா அல்லது எதிர்ப்பையும் மீறி நடிப்பாரா என்ற கேள்வி இன்று சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது

இந்த நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் அந்த படத்திற்கு மட்டுமன்றி அவர் நடித்த மற்ற படங்களுக்கும் சிக்கல் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என வெளிநாட்டு தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஒரு சிலர் திடீரென போர்க்கொடி தூக்கியதால் விஜய் தரப்பு மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தியேட்டர்கள் விரைவில் திறக்க உள்ள நிலையில் விரைவில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற திட்டமிட்டுள்ள படக்குழுவினர் விஜய் சேதுபதியால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இதனை அடுத்து விஜய் சேதுபதியிடம் அவசர ஆலோசனை செய்ததாகவும் 800 படத்தில் நடிக்காமல் இருந்து விலகுமாறு அவர் அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாரதிராஜா சீமான் உள்ளிட்ட பெரிய ஆட்கள் சொல்லியும் பதில் சொல்லாமல் மவுனம் காத்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மாஸ்டர் படத்திற்கு சிக்கல் தொடர்வதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

From around the web