அசிங்கமாக பேசிய நபர்... ஓட விட்ட பிரியாமணி

தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் நடிகை ப்ரியாமணி.

 
அசிங்கமாக பேசிய நபர்... ஓட விட்ட பிரியாமணி

அண்மையில் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்ட ரசிகருக்கு ஸ்விட்டாக பதில் சொன்ன நடிகை ப்ரியாமணி, தற்போது தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்த நபருக்கு, அவருடைய மொழியிலே பதில் சொல்லி இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளார். அவரின் இந்த துணிச்சலான பதிலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பாரதிராஜா இயக்கிய ’கண்களால் கைது செய்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியாமணி. 2006 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் அமிரின் 'பருத்திவீரன்' திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் . 

அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் ப்ரியாமணி. அதில் ரசிகர் ஒருவர் கமெண்ட்டில், ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று ஆசையாக கேட்க அதற்கு பிரியாமணியோ 'எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் அதற்கு முன் என் கணவரிடம் நீங்கள் அனுமதி பெற வேண்டும், அவர் சம்மதம் தெரிவித்தால், உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என கூலாக பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பிலிம் பேர் நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் கிளாமராக பங்கேற்ற புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ப்ரியாமணி. இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும், ஏராளமான கமெண்டுகளும் குவிந்து வந்தன. அதில் நெட்டிசன் ஒருவர் உங்கள் நிர்வாண புகைப்படத்தை பதிவிடுங்கள் என ஆபாசமாக கேட்டார்.

இதனால் கடுப்பான நடிகை ப்ரியாமணி, 'முதலில் உங்க அம்மா மற்றும் சகோதரியிடம் என்னிடம் கேட்டதை போன்று பதிவிடச் சொல்லுங்கள். அதன் பிறகு நான் பதிவிடுகிறேன்' என காட்டமாக பதிலளித்துள்ளார். இந்த பதிலை சற்றும் எதிர்ப்பார்த்திடாத ரசிகர் ஆளை விட்டால் போதும் என்ற எண்ணத்தோடு 'சாரி மேடம்' என்று சொல்லிவிட்டு ஓடியே விட்டார். இந்த மாதிரி ஆட்களை இப்படித்தான் மேடம் டீல் பண்ண வேண்டும் என பல ரசிகர்கள் பிரியாமணியை வாழ்த்தி வருகின்றனர்.

From around the web