மீண்டும் ஹரீஷ் கல்யாணுடன் இணையும் ப்ரியா பவானி ஷங்கர் - எகிரும் எதிர்பார்ப்பு!!!

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ஸ்டார் திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் தற்போது ப்ரியா பவானி ஷங்கர் இணைகிறார் எனும் நம்பத்தகுந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
நடிகர் ஹரீஷ் கல்யாண் சில படங்களில் நடித்திருந்தாலும், இயக்குநர் இளன் இயக்கத்தில் ரைசாவுடன் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை சென்றடைந்தார். பிக்பாஸில் பங்கேற்றிருந்த ஹரீஷ் கல்யாணுக்கு அதன் பிறகு உருவான இந்த படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
பின்னர் தாராள பிரபு படத்தில் நடித்த ஹரீஷ், ப்ரியா பவானி ஷங்கருடன் ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் இணைந்தார்.
மிக அண்மையில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இதே ஜோடி, இளனின் இயக்கத்தில் மீண்டும் ஸ்டார் திரைப்படத்தில் இணைகிறது.
முன்னதாக தளபதி பட ரஜினி கெட்டப்பில் ஹரீஷ் கல்யாண் தோன்றிய ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்த நிலையில் இப்போது ப்ரியா பவானி ஷங்கர் இணைவதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.