உடல் எடையை குறைத்து அசத்திய விஜய் நண்பரின் மனைவி...

உடல் எடையை குறைத்து ஊக்கப்படுத்தும் புகைப்படத்தை விஜய்யின் நண்பராக சஞ்சீவ் மனைவி பதிவிட்டுள்ளார்.
 

பிரபல தொலைக்காட்சிகளில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் சஞ்சீவ், இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இவருக்கும் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்திக்கும் திருமணமானது, மேலும் ப்ரீத்தி ஆண்டாள் அழகர், பொம்மலாட்டம், பந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆம் தனது உடலில் உள்ள 15 கிலோவை குறைத்து, தற்போது எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web