நியூ எண்ட்ரீ கொடுக்கும் 90களில் கலக்கிய ப்ரீதா ராகவ்

சீரியலின் மூலம் நியூ எண்ட்ரீ கொடுக்க இருக்கிறார் நடிகை ப்ரீதா ராகவ். 
 
நியூ எண்ட்ரீ கொடுக்கும் 90களில் கலக்கிய ப்ரீதா ராகவ்

சன் தொலைக்காட்சியில் ரோஜா, வானத்தை போல, அன்பே வா போன்ற சீரியல்கள் படு பிரபலம். TRPயில் முன்னிலையில் இருப்பது ரோஜா சீரியல் தான்.

இப்போது தான் மெல்ல மெல்ல TRP அதிகம் பெற்று வருகிறது அன்பே வா சீரியல். இந்த சீரியலில் இருந்து அஞ்சலி என்கிற நடிகை திடீரென விலகியுள்ளார்.

அதற்கு காரணம் அவருக்கான காட்சிகள் சீரியலில் அதிகம் இல்லை என்பதால் விலகுகிறார் என்கின்றனர்.

தற்போது இதே சீரியலின் மூலம் நியூ எண்ட்ரீ கொடுக்க இருக்கிறார் நடிகை ப்ரீதா ராகவ். 90களில் கலக்கிய இந்த நடிகை என்ன ரோலில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் சீரியலில் எந்த லுக்கில் வரப்போகிறார் என்ற புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

From around the web