அட இது என்னப்பா அர்த்தம்... மண்டையை பிய்க்கும் பிரபாஸ் ரசிகர்கள்!!!

இத்தாலி மொழிக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி போயிருக்கும் பிரபாஸ் ரசிகர்கள்.
 

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு காதலர் தினத்தன்று இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷ்யாம்’ படக்குழு திரைப்பட ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதுடன், படத்திலிருந்து ஒரு ஸ்பெஷல் காட்சியையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணையும் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் வரும் 2021 ஜூலை 30 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர், காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் இதில் நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.

இதன் ஒரு சிறப்பு காட்சி தான் வெளியானது. அதில், ரயில் ஒன்றில் காணொளி தொடங்க, காட்சி அப்படியே காடுகளை நோக்கி பயணிக்கிறது. அங்கு காதல் ரசம் பொங்க  பூஜாவிடம், ‘செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி?’ என்று பிரபாஸ் உரையாடுகிறார். 

இத்தாலி மொழியில் இருக்கும் இந்த உரையாடலின் பொருள் என்ன என பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். இன்னும் சிலர், “நீ ஒரு தேவதை.. உன்னைக் காண நான் மரணிக்க வேண்டுமா?” என்று அர்த்தம் என்று கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி காதலும் காதல் சார்ந்ததுமாய் இருக்கும் இப்படம் இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக இருக்கும் என்று முன்னமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சிறப்பு காட்சி இன்னும் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது.  

From around the web