சிம்பு, விஜய் பாணியை பின்பற்றும் பிரசாந்த்!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ’அந்தாதூன்’ படத்தின் ரீ-மேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை பொன்மகள்வந்தாள் படத்தின் இயக்குனர் ஜெஜெ பெடரிக் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்
மேலும் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக பிரசாந்த்தை 22 கிலோ உடல் எடையை குறைக்கும் படி இயக்குனர் கூறியிருப்பதாக தெரிகிறது
இதனை அடுத்து மூன்று பயிற்சியாளர்கள் உதவியுடன் பிரசாந்த் உடலை குறைக்க முடிவு செய்துள்ளார். சிம்பு ஒரே மாதத்தில் தனது உடலை 25 கிலோ குறைத்தது போல் அவரது பாணியிலேயே உடலை குறைத்து அவரைப் போலவே ஸ்லிம் ஆக மாற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தில் பியானோ வாசிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாக இருக்கிறது என்றும் இதனை அடுத்து பியானோ வாசிக்க தெரிந்த பிரசாத் இந்த படத்தில் தானே பியானோ வாசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் பியானோ வாசிக்கும் காட்சிகள் வரும்போது இந்த காட்சிக்கு பியானோ வாசித்தவர் பிரசாந்த் என்று டைட்டிலும் வரும் என்று தெரிகிறது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் பாடிய பாடல் திரையில் வரும்போது இந்தப் பாடலை பாடியவர் விஜய் என்ற டைட்டில் வரும். அதேபோல் தற்போது பிரசாந்தும் பியானோ வாசிக்கும்போது டைட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது