பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இளையராஜா: பத்திரிகையாளர்கள் குவிய வாய்ப்பு இருப்பதால் பரபரப்பு

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே 

இளையராஜாவின் மனுவுக்கு பதில் அளித்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், ஒரு நாள் மட்டும் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய அனுமதி அளித்தது. இருப்பினும் ஒரு சில நிபந்தனைகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது 

ilaiyaraja

இந்த நிலையில் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு தியானம் செய்யப் போகும் நாள் எது என்பதை ஊடகங்கள் கண்காணித்துக் கொண்டிருந்தன. சற்றுமுன் வந்த தகவலின்படி பிரசாத் ஸ்டூடியோவுக்கு நாளை இளையராஜா தனது உதவியாளருடன் வரவிருப்பதாக கூறப்படுகிறது

பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா சில மணி நேரங்கள் தியானம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பத்திரிகையாளர்கள் நாளை பிரசாத் ஸ்டூடியோ அருகே கூடிய வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web