பிச்சை எடுத்தாவது உதவி செய்வேன்… பிரகாஷ்ராஜின் ட்வீட்!!

ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் உணவு உட்பட பல அடிப்படைத் தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் சினிமாப் பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள் தன்னார்வலர்கள் எனப் பலரும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களுக்கு காய்கறி, அரிசி, உணவு, எனப் பல வகையிலும் பல லட்சக் கணக்கிலான மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். மேலும் தன் வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உண்ண உணவும், இருக்க இருப்பிடமும் வழங்கியுள்ளார். அதுகுறித்து
 
பிச்சை எடுத்தாவது உதவி செய்வேன்… பிரகாஷ்ராஜின் ட்வீட்!!

ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் உணவு உட்பட பல அடிப்படைத் தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் சினிமாப் பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள் தன்னார்வலர்கள் எனப் பலரும் உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களுக்கு காய்கறி, அரிசி, உணவு, எனப் பல வகையிலும் பல லட்சக் கணக்கிலான மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார்.

பிச்சை எடுத்தாவது உதவி செய்வேன்… பிரகாஷ்ராஜின் ட்வீட்!!

மேலும் தன் வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உண்ண உணவும், இருக்க இருப்பிடமும் வழங்கியுள்ளார். அதுகுறித்து தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில், “நான் பிச்சை எடுத்தாவது கடன் வாங்கியவது பிறருக்குப் பகிர்ந்து கொடுப்பேன். உண்மையில் என்னைத் தேடி வந்து அவர்கள் வெறும் கையோடு திரும்பக்கூடாது.” என்று கூறியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் வில்லன், அப்பா, அண்ணன் எனப் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோபோலவே செயல்பட்டு வருகிறார். இவர் இதுமட்டுமின்றி தினசரிக்கு 3000 பேருக்கு உணவு சமைத்து வழங்குகிறார்.

இவரது இந்தப் பதிவினை ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகப் பிரபலங்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

From around the web