தயவு செய்து ஏதாவது பேசுங்கள். அமிதாப்புக்கு பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

தமிழகத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே ஒருசிலர் ரஜினி இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைப்பதையே பகுதி நேர தொழிலாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சற்று வித்தியாசமாக ரஜினிக்கு பதிலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: நீங்கள் பெரிய மனிதர். உங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எதிர்கால தலைமுறை உங்களை பார்த்து சமூகம் அபாயத்தில் இருந்தபோது நீங்கள் ஏன் அமைதி காத்தீர்கள்? என்று
 

தமிழகத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே ஒருசிலர் ரஜினி இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைப்பதையே பகுதி நேர தொழிலாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சற்று வித்தியாசமாக ரஜினிக்கு பதிலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:

நீங்கள் பெரிய மனிதர். உங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எதிர்கால தலைமுறை உங்களை பார்த்து சமூகம் அபாயத்தில் இருந்தபோது நீங்கள் ஏன் அமைதி காத்தீர்கள்? என்று உங்களை கேட்கக்கூடாது.

ஐயா, உங்கள் குரலுக்கு அதிகம் மதிப்பு உள்ளது. தயவு செய்து ஏதாவது பேசுங்கள். பேசாமலிருப்பதற்கு தங்கள் வயதும், முதுமையும் ஒரு காரணம் என பொய்யான காரணங்கள் கூற வேண்டாம். நீங்கள் கவிதைகள் அறிந்த அற்புத மனிதர். உங்கள் குரல் தற்போது தேவைப்படுகிறது.

உங்களிடமிருந்தும் யாரும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. சொல்லப்போனால் நீங்கள் தான் பலரை காப்பாற்றி வருகிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உதவி புரியவில்லை எனினும் தங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்கலாமே.

இந்த சம்பவங்களை கேட்கும்போது நான் உடைந்து போகிறேன். இதுபற்றி பேசுவதும் பேசாததும் உங்கள் விருப்பும் என்பது உண்மையே. ஆனால், நீங்கள் இதைப் பற்றி பேசியதெல்லாம் இந்த தகவல்கள் அசிங்கமானது என்பதும் இதைப்பற்றி பேசுவது அசிங்கமானது என்பது மட்டுமே ஆகும்.

இந்த துயருக்கு உள்ளானவள் எனது மகள் அல்லது யாருடைய மகளாகவும் இருக்கலாம். அதை மனதில் கொண்டு சிறிது வாயை திறக்கலாமே?

இவ்வாறு அந்த பதிவில் பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார்.

From around the web