சூரரை போற்று: திரைவிமர்சனம்! ஒரு இளைஞனின் பறக்கும் கனவு!

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா நடிப்பில் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் 

விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஏழை எளியவர்களுக்கும் விமான பயணம் சாத்தியப்பட வேண்டும் என்ற ஒரு இளைஞன் கண்ட கனவை சிதைக்க முயற்சிக்கும் விமான நிறுவன அதிபர்களின் சதியும் தான் இந்த படத்தின் திரைக்கதை 

ஜிஆர் கோபிநாத் என்பவர் விமான நிறுவனத்தை தொடங்கி ஏழை எளியவர்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்கிய ஒரு உண்மை கதையின் வடிவம் தான் இந்த சூரரைப்போற்று 
ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் உள்ள முக்கிய சம்பவங்களை மட்டும் எடுத்து அதற்கு மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்து உள்ள சுதா கொங்கரா இந்த படத்தின் மூலம் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும்

soorarai potru

ஒரு உடுப்பி ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு எப்படி விமான நிறுவனத்தை தொடங்குவது என்று சூர்யா கொடுக்கும் ஐடியாவாகட்டும் சிட்டுக்குருவி பறப்பதை பார்த்து உடனடியாக சின்ன விமானங்களை பயணிகளுக்காக ஏற்பாடு செய்தால் என்ன என்பது குறித்து அவர் சிந்திக்கும் திறன் ஆகட்டும், ரயில்வே ஸ்டேஷனில் விமான டிக்கெட்டை விற்பனை செய்யும் முயற்சி ஆகட்டு, திரைக்கதை மிக அபாரமாக உள்ளது 

இயக்குனர் சுதா என்ன நினைத்தாரோ அந்த நடிப்பை அப்படியே கொண்டு வரும் சூர்யாவின் நடிப்பு அதற்கு இணையான அபர்ணாவின் நடிப்பும் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட் ஆக உள்ளன. அதே போல் ஊர்வசி, கருணாஸ், பரேஷ் உள்பட பலரும் இந்த படத்தில் தங்களுடைய கேரக்டரை மிகச்சரியாக நேர்த்தியாக நடித்துள்ளனர் 

ஜிவி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்களும் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கச்சிதமான பணிகளால் இந்த படம் ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் நகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் கடந்த சில வருடங்களாக சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் வெற்றி கிடைக்காத நிலையில் இந்த படத்தின் மூலம் அந்த வெற்றியை அவர் பெற்றுவிட்டார் என்று கருதப்படுகிறது

From around the web