ரிலீசுக்கு முன்னரே பைரஸியில் சூரரை போற்று!

 

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நேற்று இரவு 10 மணிக்கு கிட்டத்தட்ட பல நாடுகளில் ரிலீஸ் ஆகிவிட்டது என்பதும், இன்று அதிகாலை முதல் அனைத்து நாடுகளிலும் இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உள்பட பலர் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். முதல்கட்ட தகவலாக சூரரைப்போற்று படத்திற்கு மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதாகவும் சூர்யாவின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு கிடைத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

soorarai potru

இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் நேற்று இரவு 10 மணிக்கு வெளியான நிலையில் 7 மணிக்கு மேல் ஒரு சில பைரஸி தளங்களிலும் என்ற டெலிகிராம் என்ற சமூக வலைதளத்திலும் வெளியாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மற்றும் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் 

ஒரு தரமான படத்தை மக்களிடம் நேர்மையாக சென்று சேர வேண்டும் என படக்குழுவினர் எதிர்பார்த்திருந்த நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு திருட்டுத்தனமாகப் பைரஸியில் ஒளிபரப்பியது குறித்தும் படக்குழுவினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவும் படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web