அண்ணாத்த' படத்துல சூப்பர் சர்ப்ரைஸ் இருக்கா?'.. ரிவீல் செய்த பிரபல நடிகர்!

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்துக்காக ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். 

 
அண்ணாத்த' படத்துல சூப்பர் சர்ப்ரைஸ் இருக்கா?'.. ரிவீல் செய்த பிரபல நடிகர்!

ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் சூரி முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.  டி.இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கடந்த டிசம்பரில் ரஜினிகாந்த் உயர் ரத்த அழுத்தசிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். 

இதனை அடுத்து தீவிரமாக படப்பிடிப்பு பணியில் மீண்டும் அதே எனர்ஜியுடன் இயங்கி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள நகைச்சுவை காட்சிகள் அவரது பழைய ஹிட் படங்களின் நினைவுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பிரபல குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியன் தெரிவித்துள்ளார். 

மதராசப்பட்டினம், கலகலப்பு உள்ள படங்களின் மூலம் பிரபலமானவர் ஜார்ஜ் மரியன். சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஜார்ஜ் மரியன் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜார்ஜ் மரியான், “அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும்” என பதிவிட்டுள்ளார்.


 

From around the web