விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்த பாப் பாடகி: பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத்

 

மத்திய அரசின் புதிய விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு பாப் பாடகி ரிஹானா அவர்கள் தனது டுவிட்டரில் ஆதரவு கொடுத்து இருக்கும் நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வட இந்திய விவசாயிகள், புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில் இந்த விவசாய போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏன் நான் பேசவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்

rihana kangana

இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த டுவிட்டுக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல என்றும் இந்தியாவை பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள் என்றும் உண்மையை தெரிந்து கொள்ளாமல் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானாவுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


 

From around the web