பொங்கலுக்கு எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன்.... உறுதி செய்த கார்த்தி  

2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகலாம்.
 
பொங்கலுக்கு எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன்.... உறுதி செய்த கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. கல்கியின் காவியமான ஐந்து புத்தகத் தொடர் நாவல் - பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளாக பல திரைப்பட தயாரிப்பாளர்களின் கனவுத் திட்டமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இப்போது இந்த கடினமான பணியை முடிக்க தயாராக உள்ளார் மணிரத்னம். ஆம் மிக பிரமாண்டமான பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி இருக்கிறது. 

அதில் முதல் பாகத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில்  வருகிற 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கார்த்தி  பொன்னியின் செல்வன் படத்தை பற்றிய இந்த தகவலை அவர் உறுதி செய்துள்ளார். எனவே ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

From around the web