பொன்னியின் செல்வன் திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக முடிந்து விட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அதற்குள் திடீரென கொரனோ பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது கடந்த நான்கு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து சமீபத்தில் சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது இதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் பணிகளை நிறுத்துமாறு மணிரத்னம் கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
 

பொன்னியின் செல்வன் திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக முடிந்து விட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அதற்குள் திடீரென கொரனோ பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

கடந்த நான்கு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து சமீபத்தில் சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது

இதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் பணிகளை நிறுத்துமாறு மணிரத்னம் கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

எதற்காக மணிரத்னம் இந்த படத்தின் பணியை நிறுத்த சொன்னார் என்று தெரியாமல் படக்குழுவினர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். உலகமே பொருளாதார சிக்கலில் இருக்கும் நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது படம் தேவையா? என்று தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருவதாக ஒரு வதந்தி பரவி வருகிறாது. எனவே இந்த படம் அனேகமாக டிராப் என்று கூறப்பட்டாலும் அதில் உண்மையில்லை என்றும், பொன்னியின் செல்வன் நிச்சயம் தொடரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், விஜய் உள்பட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க முயற்சித்து அது தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web