பொன்னியின் செல்வன் பஞ்சாயத்து: த்ரிஷாவை கைது செய்ய புகார்!

 
trisha

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை எடுத்ததாக த்ரிஷா மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அஹில்யா கோட்டை நடைபெற்று வருகிறது. அதேபோல் இங்கு உள்ள மாதிரி ஒன்றில் நர்மதை நதிக்கரையில் த்ரிஷா படகிலிருந்து கீழே இறங்கி நடந்து வருவது போன்ற காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் படமாக்கியுள்ளார்

அப்போது த்ரிஷா கரையில் இருந்து இறங்கி காலணிகளை அணிந்து நடந்து வரும்போது கீழே நந்தி மற்றும் சிவன் சிலைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் வைரல் ஆகி வரும் நிலையில், தங்களது நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாகவும் இதனை அடுத்து மணிரத்னம் மற்றும் த்ரிஷாவை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

ஏற்கனவே ஹைதராபாத் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று இறந்ததன் காரணமாக மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web