பொங்கல் ரிலீஸ் தான், ஆனால் தியேட்டரில் இல்லை: ’மாஸ்டர்’ படம் குறித்த அதிர்ச்சி தகவல்!

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று கிட்டத்தட்ட 99% உறுதி செய்யப்பட்டதாக யூட்யூப் சேனல் நடத்தி வரும் சில அதிமேதாவிகள் கூறினர். மேலும் ‘மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகும் என்றும் ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதால் வேறு எந்த திரைப்படமும் அந்த நாளில் வெளியாகாது என்றும் சினிமா வல்லுனர்கள் போல் தங்களை தாங்களே நினைத்துக்கொண்டு கூறி வந்தனர் 

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன

master

தளபதி விஜய்யின் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கும் என்பதால் உலகம் முழுவதும் திரையரங்குகள் திறந்த பின்னர் தான் வெளியிட முடியும் என்று தயாரிப்பாளர் தரப்பு கருதுகிறது 

எனவே ’மாஸ்டர்’ திரைப்படம் ஏற்கனவே திட்டமிட்டபடி பொங்கல் தினத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யலாமா என்ற ஆலோசனையை மீண்டும் தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் என்ற தகவல் வெளியாகி கொண்டிருப்பது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web