நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி புகழ்ந்து பேசிய போண்டாமணி!

நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி பேட்டி அளித்துள்ளார் போண்டா மணி!
 
நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி புகழ்ந்து பேசிய போண்டாமணி!

ஒரு நடிகனின் தொழில் நடிப்போடு மட்டும் முடிந்து விடாது சமூகத்திற்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர் நடிகர் விவேக். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சமூக சீர்திருத்தங்களையும் சமூகத்திற்கு நல்லது களையும் செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் மரங்களையும் நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது படத்தில் காமெடியோடு மட்டுமில்லாமல் கருத்துக்களையும் கூறி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பேர்பட்ட நடிகனை ஆகிய சமூக சீர்திருத்தவாதி விவேக் மரணமடைந்து மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

vivek

அந்தப்படி நேற்றைய தினம் அவர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவரின் உடல்நிலை பற்றி 24 மணி நேரத்திற்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று நேற்றைய தினம் மருத்துவர் கூறியிருந்தார். 24 மணி நேரத்திற்குள் உயிரானது உடலை விட்டுப் பிரிந்து சினிமா உலகத்தையே கண்ணீருக்குள் மூழ்கியது. மேலும் இவருக்கு ரசிகர்கள் பலரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் இயக்குனர்கள் நடிகர்கள் பலரும் நேரில் வந்து சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு ஆதரவும் கூறியிருக்கின்றனர்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் பலரும் வந்து நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்படி தன்னோடு பணியாற்றிய சக நடிகரான போண்டாமணி நேரில் அஞ்சலி செலுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் நடிகர் விவேக் உதவி செய்யும் நல்ல மனிதர் என்றும் கூறினார்.மேலும் தன்னோடு இருப்பவர்களிடம் கஷ்டங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்வார் . மேலும் அவர் நான் இலங்கையிலிருந்து வந்தேன் ஆயினும் அவர் எனக்கு உணவளித்து பாதுகாத்து தட்டிக் கொடுத்தார் என்றும் கூறினார் நடிகர் போண்டா மணி.

From around the web