அரசியல் கட்சி: மீண்டும் அதிரடி முடிவெடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

 

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் அரசியல் கட்சி அறிவிப்பு வந்த ஒரு சில மணி நேரத்தில் விஜய்யின் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. தனது தந்தையின் கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 

sac

இதனை அடுத்து தந்தை மகன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது அரசியல் முடிவில் இருந்து திடீரென எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் பின் வாங்கி உள்ளார் 

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை அவர் நிறுத்திவிட்டதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

எனவே எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்யின் பெயரில் ஆரம்பிக்க இருந்த அரசியல் முடிவில் இருந்து பின்வாங்கி விட்டதாகவே தெரிகிறது

From around the web