ரஜினி படம் பார்க்க வந்த பிரபல அரசியல் தலைவர் ஏமாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், ஒரு அரசியல் கட்சி தலைவருமான ஒருவர் தர்பார் படம் பார்க்க ஒரு தியேட்டருக்கு வந்துள்ளார் அவரும் அவருடன் வந்தவர்களும் ஏழு பேர்களும் வரிசையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த சீட்டில் உட்கார்ந்து இருந்தனர். இந்த நிலையில் அதே சீட்டுகளில் தங்களுடைய தங்களிடம் டிக்கெட் இருக்கிறது என்றும் ஏழு பேர் வந்து அவரிடம் முறையிட்டனர் ஒரு அரசியல் கட்சி தலைவரிடமே சில இளைஞர்கள்
 
ரஜினி படம் பார்க்க வந்த பிரபல அரசியல் தலைவர் ஏமாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், ஒரு அரசியல் கட்சி தலைவருமான ஒருவர் தர்பார் படம் பார்க்க ஒரு தியேட்டருக்கு வந்துள்ளார்

அவரும் அவருடன் வந்தவர்களும் ஏழு பேர்களும் வரிசையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த சீட்டில் உட்கார்ந்து இருந்தனர். இந்த நிலையில் அதே சீட்டுகளில் தங்களுடைய தங்களிடம் டிக்கெட் இருக்கிறது என்றும் ஏழு பேர் வந்து அவரிடம் முறையிட்டனர்

ஒரு அரசியல் கட்சி தலைவரிடமே சில இளைஞர்கள் இவ்வாறு பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பின்னர் தான் அந்த அரசியல் தலைவருக்கு தாங்கள் எடுத்து வந்த டிக்கெட் மறுநாளுக்கு உரியது என்பது தெரியவந்தது. இருப்பினும் எந்த வித அதிகாரத்தையும் காட்டாமல் உடனடியாக அந்த அரசியல் தலைவர் தன்னுடன் வந்தவர்களுடன் தியேட்டரில் இருந்து வெளியேறினார்.

அரசியல் தலைவர் என்றாலே அராஜகம் செய்பவர்கள் என்று மக்கள் நினைத்திருக்கும் நிலையில் இப்படி ஒரு அரசியல் தலைவரா? என்று இந்த செய்தியை கேட்டதிலிருந்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்

From around the web