மறைந்த சித்ரா கணவரை மீண்டும் கைது செய்த போலீஸ்: குடும்பத்தினர் அதிர்ச்சி

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே
மேலும் சித்ரா மறைவு குறித்து ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை முடிந்து முடிவடைந்து விட்டது என்பதும் அது குறித்த அறிக்கையை தற்போது காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேமந்த் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் சில புகார்கள் அவர் மீது வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஹேமந்த் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர் 3
ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஹேமந்த் மீது உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் கைது செய்யப்பட்டு இருப்பது சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது