மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு, உறவினர்கள் வருகை: என்ன ஆச்சு எஸ்பிபிக்கு?

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக சீராக இருந்த நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 

இந்த நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தங்கை சைலஜா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து உள்ளனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் போலீசார் மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

எஸ்பிபி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் எஸ்பிபி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

From around the web