பிக்பாஸ் வனிதா மீது வழக்கு பதிவு செய்த போலீஸார்!

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக போகிறதோ இல்லையோ, சண்டையும் சச்சரவுமாக போகிறது. ஒரு நாளைக்கு யாரோ ஒருத்தர் ஆச்சும் அழணும் இல்ல, வனிதாகிட்ட திட்டு வாங்கி கட்டிக்கணும்னே பிளான் போட்டு இருக்காங்க போல. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் வனிதா நடிகர் விஜயக்குமாரின் மகள். அவர் படங்களில் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமில்லை, ஆனால் அவருடைய சொந்த குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் அவரை பிரபலமாக்கியது. இவர் நடிகர் ஆகாஷ் என்பவரைத்
 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக போகிறதோ இல்லையோ, சண்டையும் சச்சரவுமாக போகிறது. ஒரு நாளைக்கு யாரோ ஒருத்தர் ஆச்சும் அழணும் இல்ல, வனிதாகிட்ட திட்டு வாங்கி கட்டிக்கணும்னே பிளான் போட்டு இருக்காங்க போல.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் வனிதா நடிகர் விஜயக்குமாரின் மகள். அவர் படங்களில் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமில்லை, ஆனால் அவருடைய சொந்த குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் அவரை பிரபலமாக்கியது.

பிக்பாஸ் வனிதா மீது  வழக்கு பதிவு செய்த போலீஸார்!

இவர் நடிகர் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்தார், பின்னர் இருவருக்கும் மண முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவதாக தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் 2010-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். இவரது மகள் ஜோவிகா, தந்தை ஆனந்துடன் தெலுங்கானாவில் வசித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் மகள் ஜோவிகாவை, சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார் வனிதா. ஆனால் தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலுங்கானா போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஆனந்த். இதனால் போலீஸார் வனிதா மீது ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார் வனிதா. அந்நிகழ்ச்சிக்காக செட் அமைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குட்பட்ட  நசரத்பேட்டை போலீஸாரிடம் உதவி கோரியுள்ளதாம் தெலுங்கானா போலீஸ்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள தெலுங்கானா போலீஸ், நடிகை வனிதாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனிதா கைது செய்யப்படுவாரா என்று குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

அப்போ இனி பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை வராதா? அச்சோ போர் அடிக்குமே என்கின்றனர் ஒரு சிலர்.  

From around the web