கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கவிஞர்!சோகத்தில் திரையுலகம்!

நடிகர் விவேக் உடலுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்!
 
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கவிஞர்!சோகத்தில் திரையுலகம்!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் தனது குணத்தாலும் இன்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பெற்றுள்ளார் நடிகர் விவேக். நடிகர் விவேக் பாரபட்சமின்றி அனைத்து தரப்பு நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் இவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் காமெடியுடன் மட்டும் இல்லாமல் பல்வேறு கருத்துக்களையும் சமூக அவலங்களுக்கு எதிரான குரலையும் எழுந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல பெரிய ஹீரோக்களின் வெற்றி படத்திற்கு பக்கபலமாக இருந்தது என்பதும் தவிர்க்க முடியாத உண்மைதான்.

vivek

அப்பேர்ப்பட்ட இந்த மனிதன் நேற்றைய தினம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. மேலும் அதன்படி நேற்றையதினம் மருத்துவர்கள் இவரின் உடல் நிலை பற்றி 24 மணி நேரத்துக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் 24 மணி நேரம் ஆவதற்குள் சினிமா உலகத்தையே சோகத்திற்கு உள்ளாக்கி மரணமடைந்தார் நடிகர் விவேக் இதனால் ஒட்டுமொத்த சினிமா  கண்ணீருடன் உள்ளது என்பது தவிர்க்க முடியாத உண்மை. மேலும் இவருக்கு ரசிகர்கள் வரிசையில் நின்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் பல நடிகர்களும் காமெடி நடிகர்களும் துணை நடிகர்களும் இயக்குனர்கள் பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மிகப்பெரிய கவிஞர் பல்வேறு படங்களில் தனது கவிதைகளால் தனது வசனங்களால் மிரட்டி இருந்தவர் கவிஞர் வைரமுத்து. அவர் நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் குறிப்பாக அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி செலுத்தினார் என்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது .இது போன்று பல கவிஞர்களும் பல நடிகர்களும் ரசிகர்களும் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web