பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்

 

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். கொரோனா காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவரது உயிர் பிரிந்த‌து

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானதாக இயக்குநர் வெங்கட்பிரபு டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நேற்றிரவு கவலைக்கிடமானது. இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 74

From around the web