பிக்பாஸ் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தின் ரிலீஸ் தகவல்

 
பிக்பாஸ் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தின் ரிலீஸ் தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும் இவர் கடைசி நேரத்தில்தான் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் ரியோ நடித்து வந்த திரைப்படமான பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இன்னும் ஓரிரு நாளில் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது

plan panni pannanum

இந்த நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களும் முடிவு செய்திருப்பதாகவும் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் ரியோ உடன் அவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

ரியோ மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web