2019 ஆம் ஆண்டில் வசூல் பட்டியலில் முதலிடத்தில் பிகில்!!

விஜய் நடிப்பில் அட்லி எடுத்த படம் பிகில், இவர்களின் வெற்றிக் கூட்டணியானது தெறி, மெர்சல் படத்தினைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, இந்துஜா, ரோபோ ஷங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தது. பிகில் படம் உலகம் முழுவதும் பல திரையரங்கில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பெரிய அளவிலான ஆதரவு கொடுத்தனர். இந்தப்
 
2019 ஆம் ஆண்டில் வசூல் பட்டியலில் முதலிடத்தில் பிகில்!!

விஜய் நடிப்பில் அட்லி எடுத்த படம் பிகில், இவர்களின் வெற்றிக் கூட்டணியானது தெறி, மெர்சல் படத்தினைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, இந்துஜா, ரோபோ ஷங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தது.

பிகில் படம் உலகம் முழுவதும் பல திரையரங்கில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பெரிய அளவிலான ஆதரவு கொடுத்தனர்.

இந்தப் படத்தின் வசூல் தற்போது 300 கோடியினை எட்டி, பேட்ட மற்றும் விசுவாசம் படங்களை மிஞ்சிவிட்டது.

2019 ஆம் ஆண்டில் வசூல் பட்டியலில் முதலிடத்தில் பிகில்!!

இந்தப் படமானது கால்பந்தாட்டம் மற்றும் பெண்கள் நிலை போன்றவற்றினை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார்.

ராயப்பன் என்கிற தாதா கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்திலும், அவரின் மகனாக மைக்கேல் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து இருப்பார்.

விஜய் மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பினைப் பெற்றன.

சமீபத்தில் பிகில் படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தனது 50 வது நாள் வெற்றி விழாவினைக் கொண்டாடியது.

From around the web