வருங்கால மனைவியுடன் மாஸ்டர் நடிகர் வெளியிட்ட புகைப்படம்!...

சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகரும் ஆதித்யா சேனல் தொகுப்பாளருமான கலாட்டா குருவுக்கு நாளை (3.2.2021) திருமணம் நடைபெறவுள்ளது.

சென்னையை சேர்ந்த பொறியாளரான இவர் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனியாக 'மதராஸி' என்ற ஒரு யூடியூப் சேனலை துவங்கினார். அதன் பிறகு அதில் கிடைத்த பிரபலத்தை வைத்து தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானார். 

பின்பு ஆர்யா நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கலாட்டா குரு கற்பகம் என்பவரை நாளை   திருமணம்  செய்ய உள்ளார். 

மேலும் தனது வரும்கால மனைவியுடன் அழகிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web