தத்துவங்கள் கூறும் "பிரபல வில்லன்!"

தமிழ், ஹிந்தி போன்ற பல இந்திய மொழிகளில் திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவர் "நடிகர் சோனு சூட்". உண்மையில் இவர் "நிஜ உலகில் ஹீரோ" என்று மக்களிடம் பேசப்பட்டு வருகிறார்.அவர் பண்ணும் ஒவ்வொரு நல்ல காரியங்களும், ஒவ்வொரு உதவும் கரங்களும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. தமிழில் வெற்றிகரமாக ஓடிய "சந்திரமுகி" என்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் "சூப்பர்ஸ்டார்" என்று அழைக்கப்படும் "நடிகர் ரஜினிகாந்த்" கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தில் "நடிகர் பிரபு"," நடிகை ஜோதிகா" மற்றும் "லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா" போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் "ஒஸ்தி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் பிரபல டான்ஸ் மாஸ்டரும், கதாநாயகனான "டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா"வுடன் "தேவி" மற்றும் "தேவி 2" என்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது நடிப்பில் வெளியாகி இன்றளவும் பார்க்கும்போது மிகவும் அச்சத்தைக் கொடுக்கும் திரைப்படம் "அருந்ததி". இத்திரைப்படத்தில் "பாகுபலி" கதாநாயகியான "நடிகை அனுஷ்கா" நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் சோனு சூட்டின் நடிப்பு இன்றளவும் பார்க்கும்போது மிகவும் அச்சத்தையும் பயத்தையும் கொடுக்கிறது. மேலும் இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறிவருகிறார். அவர் கூறும் சிறிய தகவல்கள் கூட மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.இதனால் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களும் வாழ்த்துக்களும் லைக்ஸ்களும் வந்த வண்ணமாக உள்ளது.
भरोसा जीत..
— sonu sood (@SonuSood) February 21, 2021
जिंदगी की जंग अपने आप जीत जाएगा।