பேட்ட படம் பார்த்த ரசிகர் அடித்து கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தை சிகரெட் பிடித்தபடியே பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் உடுமலையில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் ரஜினி ரசிகர் மணிகண்டன் என்பவர், கடந்த 12ஆம் தேதி ரஜினியின் ‘பேட்ட’ படத்தை பார்க்க சென்றார். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஸ்டைலாக சிகரெட் பிடித்ததால் அருகில் இருந்த நபர் அவரை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மணிகண்டன் சிகரெட் பிடித்ததால் ஆத்திரமடைந்த பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் மணிகண்டனை வெளியே இழுத்து வந்து அங்கிருந்த
 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தை சிகரெட் பிடித்தபடியே பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்

பேட்ட படம் பார்த்த ரசிகர் அடித்து கொலை

உடுமலையில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் ரஜினி ரசிகர் மணிகண்டன் என்பவர், கடந்த 12ஆம் தேதி ரஜினியின் ‘பேட்ட’ படத்தை பார்க்க சென்றார்.

படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஸ்டைலாக சிகரெட் பிடித்ததால் அருகில் இருந்த நபர் அவரை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மணிகண்டன் சிகரெட் பிடித்ததால் ஆத்திரமடைந்த பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் மணிகண்டனை வெளியே இழுத்து வந்து அங்கிருந்த உருட்டுக்கட்டை ஒன்றால் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மணிகண்டன் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்ததார். சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் மணிகண்டனை தாக்கிய நபரை கண்டுபிடித்த போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

From around the web