இது ஒரு சாபக்கேடு.. பொங்கிய விஜய் பட இயக்குநர்!...

தியேட்டர்களுக்கு புது சாபக்கேடு வந்துள்ளது என விஜய் பட இயக்குநர் தெரிவித்துள்ளார்
 

தளபதி விஜய்யின் படங்களை அடுத்ததாக இயக்கப்போவது யார் என்ற பேச்சு மாஸ்டர் படம் வெளியாகும் முன்பே பல இயக்குனர்கள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றது.

அதில் ஒருவர் இயக்குனர் பேரரசு. விஜய்யை வைத்து 2005 ல் திருப்பாச்சி, சிவகாசி என இருபடங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர். கடந்த 5 வருட காலமாக இவர் இயக்கத்தில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை.

அண்மைகாலமாக பொது விசயங்கள் குறித்து பேசி வரும் அவர் உதிர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

இதில் அவர் தியேட்டரில் படம் பார்ப்பதே நல்ல அனுபவம். அங்கு வெளியானால் அவற்றிற்கு மரியாதை. தற்போது தியேட்டர்களுக்கு புது சாபக்கேடு வந்துள்ளது. செல்போனில் படங்கள் வெளியாகின்றன. ஓடிடியில் படங்கள் வெளியாவது தொடர்ந்தால் திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என தெரிவித்துள்ளார்.

From around the web