மக்கள் என் பக்கம் தான்: டாஸ்க்கில் தோற்ற ஆரி பஞ்ச் வசனம்

 

பிக் பாஸ் வீட்டில் நேற்று குறைசொல்லும் டாஸ்க் நடந்து முடிந்த பின்னர் அனைவரையும் வரிசைப்படுத்தும் நேரம் வந்தது. அப்போது ஆரியின் மீது கொண்ட பகை காரணமாக கிட்டத்தட்ட அனைவருமே அவரை நாமினேட் செய்து அவரை 7ஆவது இடத்திற்கு தள்ளினார்கள். அதனால் அவருக்கு ஒரே ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது 

ஆரியை அடுத்து பாலாவுக்கு 6வது இடமும், ரியோவுக்கு 5-வது இடமும், ரம்யாவுக்கு 4வது இடமும் கேபிக்கு மூன்றாவது இடமும், ஷிவானிக்கு இரண்டாவது இடமும் கிடைத்தது. இதனால் இந்த டாஸ்க்கில் சோம் முதலிடத்தைப் பெற்றார் என்பதும், அவருக்கு 7 புள்ளிகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஆரி, டாஸ்க், பஞ்ச் வசனம், பிக்பாஸ்,

குறை சொல்லும் டாஸ்க்கில் தன்னை கடைசி இடத்திற்கு தள்ளிய போட்டியாளர்களை பார்த்து பேசிய ஆரி, ‘இந்த வீட்டில் உள்ள மக்கள் வேண்டுமானால் என் பக்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வெளியே உள்ள மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ரேட்டிங்கை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதையும் மீறி நான் வெளியே செல்ல வேண்டுமென்றாலும் மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறேன் என்று பஞ்ச் வசனத்தையும் பேசிவிட்டு சென்றார் 

ஃபினாலே டாஸ்க்கில் மொத்தம் இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் மொத்த புள்ளிகள் அடிப்படையில் ரியோ முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரியோவை அடுத்து ரம்யா இரண்டாவது இடத்திலும், ஷிவானி மூன்றாவது இடத்திலும், சோம் நான்காவது மற்றும் பாலா நான்காவது இடத்திலும், ஆரி 5வது இடத்திலும் கேபி கடைசியில் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web