இவர் தான் பவித்ராவின் காலரா?...
பவித்ரா ஆண் நபர் ஒருவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி அழைத்து வந்துள்ளார்.
Thu, 1 Apr 2021

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2வில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் பவித்தரலட்சுமி.
இவர் யூடியூபில் வெளியான குறும் படம் மூலம் பிரபலமாகி, அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் Celebration சுற்று என்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த எபிசோடில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுது நெருங்கிய நபர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளனர். இதில் பவித்ரா ஆண் நபர் ஒருவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி அழைத்து வந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், பவித்ராவின் காதலர் தானா இவர் என கேட்க துவங்கிவிட்டனர்.