மிகப்பெரிய சுவர் ஓவியத்தில் பவித்ரா.. எதற்காக இந்த ஓவியம்?

சென்னையில் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு இருப்பது வழக்கம் தான். அதில் முக்கியமாக பவித்ரா முகம் இடம்பெற்றுள்ளது.

 
மிகப்பெரிய சுவர் ஓவியத்தில் பவித்ரா.. எதற்காக இந்த ஓவியம்?

அப்படி சமீபத்தில் சென்னை இந்திரா நகர் ரயில் நிலைய கட்டடத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன. பலதரப்பட்ட மனிதர்களின் முகங்கள் அடங்கிய இந்த ஓவியத்தில் பாதி ஒருவரின் முகம், மறுபாதி மற்றொருவரின் முகம் கொண்டு இருக்கிறது.

இந்த ஓவியம் இந்தியாவிலேயே இதுவரை இடம்பெற்ற சுவர் ஓவியங்களில் மிகப்பெரிய ஓவியம் என்றும் கூறப்படுகிறது. இந்த மிகப்பெரிய ஓவியத்தில் குக் வித் கோமாளி 2 பிரபலம் பவித்ராவின் முகம் இடம்பெற்றுள்ளது.

அதையும் பவித்ராவே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web