சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: இணைந்தார் தமன்னா!

 

கடந்த 2019ஆம் ஆண்டு வெங்கடேஷ், வருண்தேஜ், தமன்னா, மெஹ்ரின் பிர்ஜிதா ஆகியோர் நடித்த F2: Fun and Frustration என்ற தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிய நிலையில் ரூ.127 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது 

tamanna

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், வருண்தேஜ், தமன்னா, மெஹ்ரின் பிர்ஜிதா  ஆகியோர் மீண்டும் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து,  F2 கேங் மீண்டும் கிளம்பியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை அல்லு அரவிந்து அவர்கள் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தப் படமும் முதல் பாகம் போலவே சூப்பர் ஹிட் வெற்றி ஆகும் என்றும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்


 

From around the web