நலமுடன் வீடு திரும்பிய பரவை முனியம்மா- ஐசரி கணேஷ்க்கு நன்றி தெரிவித்த அபி சரவணன்

தூள் படத்தில் இடம்பெற்ற சிங்கம்போல நடந்து வரான் செல்லப்பேராண்டி பாடல் மூலம் அறிமுகமான பரவை முனியம்மா பாட்டி மிக குறுகிய காலத்தில் சினிமாவில் அனைவருக்கும் தெரிந்த பாட்டியானார். சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்த பரவை முனியம்மா சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தில் இடம்பெற்ற ராயபுரம் பீட்டரு பாட்டில் பாடி ஆடி தோன்றியதற்கு பிறகு நடிக்கவே இல்லை. இந்நிலையில் வயோதிகம் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார் பரவை முனியம்மா. சினிமா உலக பிரபலங்கள் சிலர் பரவை முனியம்மாவை சென்று
 

தூள் படத்தில் இடம்பெற்ற சிங்கம்போல நடந்து வரான் செல்லப்பேராண்டி பாடல் மூலம் அறிமுகமான பரவை முனியம்மா பாட்டி மிக குறுகிய காலத்தில் சினிமாவில் அனைவருக்கும் தெரிந்த பாட்டியானார்.

நலமுடன் வீடு திரும்பிய பரவை முனியம்மா- ஐசரி கணேஷ்க்கு நன்றி தெரிவித்த அபி சரவணன்

சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்த பரவை முனியம்மா சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தில் இடம்பெற்ற ராயபுரம் பீட்டரு பாட்டில் பாடி ஆடி தோன்றியதற்கு பிறகு நடிக்கவே இல்லை.

இந்நிலையில் வயோதிகம் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார் பரவை முனியம்மா. சினிமா உலக பிரபலங்கள் சிலர் பரவை முனியம்மாவை சென்று பார்த்து உதவி செய்தனர். இதில் நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மாவின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். மீடியாக்கள் அனைத்திற்கும் தெரிய வைத்தார்.

இதை பார்த்த சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மதுரை வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவருக்கு இலவச மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார் அதனடிப்படையில் அவருக்கு இலவச மருத்துவம் பார்க்கப்பட்டு இப்போது பரவை முனியம்மா நலமுடன் வீடு திரும்பி உள்ளார்.

இதற்கு அபி சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web