சிவகார்த்திகேயனுக்காக இணையும் பாண்டிராஜ்-அனிருத்-இமான்

சிவகார்த்திகேயனை ‘மெரீனா’ படம் மூலம் ஹீரோவாக்கி அழகுபார்த்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு மாறி மாறி இசையமைப்பவர்கள் அனிருத் மற்றும் டி.இமான். இவர்கள் மூவரும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான ‘கனா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அருண்காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்பட பலர் நடித்து வரும் ‘கனா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த
 

சிவகார்த்திகேயனுக்காக இணையும் பாண்டிராஜ்-அனிருத்-இமான்

சிவகார்த்திகேயனை ‘மெரீனா’ படம் மூலம் ஹீரோவாக்கி அழகுபார்த்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு மாறி மாறி இசையமைப்பவர்கள் அனிருத் மற்றும் டி.இமான். இவர்கள் மூவரும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான ‘கனா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அருண்காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்பட பலர் நடித்து வரும் ‘கனா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனுக்காக இணையும் பாண்டிராஜ்-அனிருத்-இமான்இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், அனிருத் மற்றும் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினர்களை வாழ்த்தவுள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்றும் அது சிறப்பு தோற்றமாக இல்லாமல் படம் முழுவதும் வரும் ஒரு திருப்புமுனை கேரக்டர் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

From around the web