ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் நடந்த பாபநாசம் பட நடிகரின் திருமணம்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் சூழல் காரணமாக ஆடம்பரமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல திருமணங்கள் அமைதியாக ஆடம்பரம் இன்றி நடந்தன என்பது தெரிந்ததே இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன், கவுதமி இணைந்து நடித்த பாபநாசம் படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஊரடங்கு காரணமாக ஆடம்பரமின்றி மிக அமைதியாக திருமணம் நடந்து முடிந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது பாபநாசம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரோஷன் பஷீர். இவருக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று
 

ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் நடந்த பாபநாசம் பட நடிகரின் திருமணம்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் சூழல் காரணமாக ஆடம்பரமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல திருமணங்கள் அமைதியாக ஆடம்பரம் இன்றி நடந்தன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன், கவுதமி இணைந்து நடித்த பாபநாசம் படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஊரடங்கு காரணமாக ஆடம்பரமின்றி மிக அமைதியாக திருமணம் நடந்து முடிந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பாபநாசம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரோஷன் பஷீர். இவருக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று இவரது திருமணம் மிக எளிமையாக நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே 50 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரோஷன் பஷீர் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு சூழ்நிலை காரணமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரையுலகினர்களை திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே நடிகர் நிவின், நடிகர் ராணா உள்பட பல பிரபல நடிகர்களின் திருமணமும் இதே போல் எளிமையாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

16-08-2020🎈

A post shared by Roshan Basheer (@roshan_rb) on

From around the web