கடும் கண்டனங்களுக்கு நடுவே வெளியான ஓவியாவின் 90 எம்.எல்.!!

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியான படம் 90 எம்.எல்., இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைத்து இருந்தார். இயக்குனர் அனிதாவே இந்தப் படத்திற்கான திரைக்கதை, வசனம் போன்றவற்றை எழுதி தயாரித்தும் இருந்தார். பிக் பாஸ் சீசன் 1 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஓவியாவை நடிக்க வைத்தால் பெரிய அளவில் வரவேற்புப் பெறும் என்று நினைத்த நிலையில், அதற்கு மாறாக இந்தப் படத்தினை வெளியிடக் கூடாது என ரசிகர்கள் கூறினர். படத்தின் டைட்டிலே வேற லெவல்
 
கடும் கண்டனங்களுக்கு நடுவே வெளியான ஓவியாவின் 90 எம்.எல்.!!

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியான படம் 90 எம்.எல்., இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைத்து இருந்தார்.

இயக்குனர் அனிதாவே இந்தப் படத்திற்கான திரைக்கதை, வசனம் போன்றவற்றை எழுதி தயாரித்தும் இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 1 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஓவியாவை நடிக்க வைத்தால் பெரிய அளவில் வரவேற்புப் பெறும் என்று நினைத்த நிலையில், அதற்கு மாறாக இந்தப் படத்தினை வெளியிடக் கூடாது என ரசிகர்கள் கூறினர்.

படத்தின் டைட்டிலே வேற லெவல் என்னும் அளவு 90 எம்.எல். என்று வைத்திருந்தனர். ஒரு அபார்ட்மெண்டில் 4 பெண்களுடன் ஓவியா அடிக்கும் லூட்டியே இந்தக் கதையாகும்.

கடும் கண்டனங்களுக்கு நடுவே வெளியான ஓவியாவின் 90 எம்.எல்.!!

படம் அர்த்தமுள்ள பெண்கள் பிரச்சினையினை பேசலாம் என்று நினைத்தவர்களுக்கு கிடைத்தது டபுள் மீனிங்க் டயலாக்குகள், புகைப்பிடிப்பது, மது அருந்துவது, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் உபயோகிப்பது, ஓரினச் சேர்க்கை போன்றவைகள் தான்.

அனிதா பெண்ணியம் பேசுகிறேன் என்ற பெயரில் வாங்காத திட்டுகளே இல்லை, மக்கள் மனதினை கொள்ளை கொண்டிருந்த ஓவியா இந்த ஒரு படத்தால் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தார்.

இவ்வளவு விமர்சனங்களுக்கு இடையே வெளியாகி, இந்தப் படம் தியேட்டரில் சில நாட்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web