29 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓவியா… வாழ்த்துகளைப் பொழியும் ஓவியா ஆர்மியினர்!!

ஹெலன் நெல்சன் என்னும் இயற்பெயர் கொண்ட நடிகை ஓவியா தனது கல்லூரிப் படிப்பினை முடித்த பின்னர் மாடலாக தனது பணியைத் துவங்கினார். விளம்பர மாடலாக வலம் வந்த இவர் 2007 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் கங்காரு என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார், ஆனால் இந்தத் திரைப்பட வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து அபூர்வா படமும் வெற்றி அடையாமல் போக 2010 இல் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அந்தப்
 
29 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓவியா… வாழ்த்துகளைப் பொழியும் ஓவியா ஆர்மியினர்!!

ஹெலன் நெல்சன்  என்னும் இயற்பெயர் கொண்ட நடிகை ஓவியா   தனது கல்லூரிப் படிப்பினை முடித்த பின்னர் மாடலாக தனது பணியைத் துவங்கினார். விளம்பர மாடலாக வலம் வந்த இவர் 2007 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் கங்காரு என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார், ஆனால் இந்தத் திரைப்பட வெற்றி பெறவில்லை.

இதனை அடுத்து அபூர்வா படமும் வெற்றி அடையாமல் போக 2010 இல் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அந்தப் படம் மாஸ் ஹிட் ஆக, இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானைக்கூட்டம், அகராதி, யாமிருக்க பயமேன், புலிவால், சண்டமாருதம், 144, ஹலோ நான் பேய் பேசுறேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 எம்.எல், கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவாணி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

29 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓவியா… வாழ்த்துகளைப் பொழியும் ஓவியா ஆர்மியினர்!!

ஆனால் படங்களைக் காட்டிலும் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்மூலமே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

அவரின் குறும்புத்தனத்தால் தனக்கென ஒரு ஆர்மியாவினையே வெளியில் கொண்டிருந்தார், இந்தநிலையில் இன்று ஓவியா 29 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஓவியா ஆர்மி சார்பில் இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமே உள்ளது.

From around the web