நடுக்காட்டில் பாறை மீது படுத்திருக்கும் ஓவியா: வைரலாகும் புகைப்படம்!

 

பிக்பாஸ் 4 சீசன்களில் மொத்தமாக அதிக புகழ் பெற்றவர் யார் என்று ஒரு கணக்கு எடுத்தால் கண்டிப்பாக ஓவியாவுக்கு தான் அதிக வாக்குகள் விழும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அதே நேரத்தில் ஓவியா அந்த புகழை சரியாக பயன்படுத்தாமல் திரையுலகிலும் பெரிய அளவில் கால் ஊன்றாமல் சமூகவலைதளத்தில் மட்டுமே புகழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இருப்பினும் ஓவியா தனது டுவிட்டரில் அவ்வப்போது பதிவு செய்யும் டுவிட்டுகளும், இன்ஸ்டாகிராமில் செய்யும் பதிவுகளும் மிகப்பெரிய அளவில் அவரது ஃபாலோயர்களால் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது 

oviya

அந்த வகையில் சற்றுமுன் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் அடர்ந்த காட்டில் சிறு ஓடையின் அருகே பாறை மீது படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இயற்கை தேவையில்லாதவற்றை வாஷ் செய்து எடுத்து விடும் என்று அவர் கூறியுள்ளது ரசிக்கத்தக்க வகையில் உள்ளது 

ஓவியாவின் இந்த டுவிட்டை அவரது ரசிகர்கள் ரசித்து பல்வேறு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இது எந்த இடம் என்றும், மிகவும் அழகான இடமாக உள்ளது என்றும் ஓவியாவும் இயற்கையும் அழகு அவர்கள் பதில் அளித்து வருகின்றனர் ஓவியாவின் இந்த டுவிட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 


 

From around the web