சுரேஷ்-கேப்ரில்லாவுக்கு எதிராக கூடிய ஒட்டுமொத்த போட்டியாளர்கள்!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் சுரேஷுக்கு எதிராக ஒட்டுமொத்த போட்டியாளர்களும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வேல்முருகன், ரியோ மற்றும் கேப்ரில்லா ஆகிய மூவரையும் முதுகில் சுமக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் வேல்முருகனை ஆரியும், ரியோவை பாலாஜியும் தூக்குகின்றனர். இந்த இரு கூட்டணிக்கு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஆதரவாளர்களாக உள்ளனர்.

ஆனால் கேப்ரில்லாவை முதுகில் சுமக்க ஒப்பு கொண்ட சுரேஷுக்கு ஆதரவாக ஒரு போட்டியாளர் கூட வரவில்லை. இதனால் இருவரும் தனித்து விடப்பட்டனர். ஒரு கட்டத்தில் கேப்ரில்லா சமாளிக்க முடியாமல் சுரேஷின் முதுகில் இருந்து இறங்கிக் கொண்டு தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டார்

இதற்காக அவர் சுரேஷிடம் மன்னிப்பு கேட்டார் என்பதும் பரவாயில்லை என்று சுரேஷ் அவருக்கு ஆறுதல் கூறிய காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளது. சுரேஷுக்கு ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய டாஸ்க்கில் அவருக்கு ஆதரவாக ஒரு போட்டியாளர் கூட வராமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி வேற லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

From around the web