அட! போலீசா நடிக்கிறாரா! நம்ம ஹீரோ....,

மலையாள இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான்.இவரது தந்தை மலையாள சினிமாவின் "மெகா ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி.நடிகர் மம்முட்டி தமிழில் "தளபதி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் இவருடன்" சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தார் இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வேற லெவலாக ஓடியது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகிய "சார்லி" என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது .குறிப்பாக அத்திரைப்படத்தில் இவரது "கெட்டப்" ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் கொடுத்தது. குறிப்பாக இவரது நடிப்பில் வெளியாகி இருந்த "பெங்களூர் டேஸ்" என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று "பிளாக்பஸ்டர் ஹிட்" அடித்தது. இப்படத்தில் இவருடன் நடிகை "நஸ்ரியா" நடித்து இருந்தார்.

மேலும் இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியாகி "பிளாக்பஸ்டர் ஹிட்" அடித்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம்.இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரிடுவர்மா நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குநர் "கௌதம் வாசுதேவ் மேனன்" இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் துல்கர் சல்மானின் 32-வது படத்தின் கெட்டப்பை போஸ்ட் செய்துள்ளார். அந்த போஸ்டரை பார்க்கும்போது நடிகர் துல்கர் சல்மான் தனது 32வது படத்தில் போலீசாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
. @dulQuer - Roshan Andrews - Bobby & Sanjay #DQ32 Shooting In Progress🔥
— Ramesh Bala (@rameshlaus) February 8, 2021
Official Title Coming Soon..!
.
Concept Illustration 😊
.@DsoeOfficial @teamdsoe
Work: @Abhijithillustr 👏
.#DulquerSalmaan #DQ32 pic.twitter.com/rNBWpVIQ44