வர்மா படத்தை பார்க்க ஓடிடி கட்டணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

 

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த வர்மா திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் அந்த படத்தை பார்த்த விக்ரம் தனக்கு திருப்தி இல்லாததால் தனது மகனின் முதல் திரைப்படம் தோல்வி படமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக அந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து விட்டார் 

இதனை அடுத்து கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் ’ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதே படம் மீண்டும் தயார் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்டோபர் 6ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் ஓடிடியில் இந்த படத்தை பார்க்க 140 ரூபாய் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே ரிலீசான ஒரு படத்தின் காப்பியை பார்ப்பதற்கு 140 ரூபாயா? என ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பாலாவின் இயக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக இந்த படத்தை 140 ரூபாய் கொடுத்து ரசிகர்கள் சிலர் பார்த்து வருகின்றனர் 

இந்தியாவில் இந்த படத்தை பார்க்க முடியாது என்று வதந்திகள் கிளம்பினாலும் ஓடிடியில் பலர் இந்த படத்தை பார்த்து தங்களுடைய விமர்சனத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web