ஹாலிவுட்டிலும் படம் தயாரிப்பேன் அடம்பிடிக்கும் ஆஸ்கார் நாயகன்!

99 சாங்ஸ் படத்தை தயாரித்த ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்!
 
ஹாலிவுட்டிலும் படம் தயாரிப்பேன் அடம்பிடிக்கும் ஆஸ்கார் நாயகன்!

ஒருகாலத்தில் இசைஞானி இளையராஜாவே இசைத் துறையில் மிகவும் ஜாம்பவானாக இருந்து அனைவரின் காதுகளையும் கட்டிப் போட்டிருந்தார். ஆனால் அவருக்குப் பின் அவரது இடத்தை பிடிப்பார் என்று பலரும் நினைத்து நிலையில் ஒருவர் வந்தார். வந்து அவரது இடத்தில் தாண்டி தற்போது உலகம் அவரது பெயர் ஒலிக்கும் அளவிற்கு இசையை பரிசாக அளித்துள்ளார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். ஏ ஆர் ரகுமான் இசைக்காகவே பலரும் திரைப்படங்களை பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் திறமைக்கு கிடைத்த பரிசாக ஆஸ்கார் இவருக்கு கிடைத்தது.

99 songs

மேலும் அவர் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றும் சொல்வார். மேலும் தமிழர்களின் பெருமையை ஹாலிவுட் வரை கொண்டு சென்ற ஒரு தமிழன் என்ற பெயரையும் பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பேர்ப்பட்ட ஆஸ்கார் நாயகன் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இசையில் உருவான அலைபாயுதே என்ற திரைப்படம் மாதவனுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இவர் இயற்றிய வந்தே மாதரம் என்ற ஆல்பம் சாங் இன்றளவும் கேட்கும்பொழுது தேசப்பற்றை உருவாகியுள்ளது.

அப்பேர்பட்ட இசை உலகின் ராஜாவாக வலம் வந்த இவர் தற்போது படம் தயாரித்துள்ளார் அந்தப்படி இவர் 99 சாங்ஸ் என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஒரு இசையை சம்பந்தமான படம் என்பதால் அவர் தயாரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் இன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் சில தகவல்களை வெளியிட்டார் மேலும் செய்தல் சந்தித்து சில தகவல்களையும் கூறினார். அதன்படி 99 சாங்ஸ் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து ஹாலிவுட்டிலும் படம் தயாரிக்கப் போவதாக ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

From around the web